Featured post

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்

 *சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும் *BAD BOYS: RIDE OR DIE* 'பேட் பாய்ஸ்' பட வரிசையில் நான்காவது பாகமான இது, '...

Friday 7 June 2024

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்

 *சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்


*BAD BOYS: RIDE OR DIE*






'பேட் பாய்ஸ்' பட வரிசையில் நான்காவது பாகமான இது, 'பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)' படத்தின் தொடர்ச்சியாகும்.

ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), 'பேட் பாய்ஸ் 2 (2023)' படத்திற்கு வழி வகுத்தது (2003).

இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள்  இயக்கியுள்ளனர்! 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன்,   இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி  படம் வெளியிடப்படுவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம்.


உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய 'பேட் பாய்ஸ்' அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும் அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பி வந்துள்ளனர் ஒரு சுவாரசியமான திருப்பத்துடன். மியாமியின் மிகச் சிறந்த டிடெக்ட்டிவ்ஸ் இம்முறை துரத்தப்படுகின்றனர்.


துப்பறியும் நிபுணர்கள்  மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) ஆகியோர் மியாமி   காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர். மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை முன்னேறும்போது, துப்பறியும்  நிபுணர்கள்  துரத்தப்படுபவர்களாக மாறுவதால் , வழக்கை முடிப்பதற்காக சட்டத்தின் எல்லைக்கு வெளியே வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.


படக்குழு:-


நடிகர்கள்: Vanessa Hudgens, Alexander Ludwig, Paola Nuñez, Eric Dane, Ioan Gruffudd, Jacob Scipio, Melanie Liburd, Tasha Smith ​​with Tiffany Haddish and Joe Pantoliano.


இயக்கம்: Adil & Bilall


தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், IMAX இலும், ஜூன் 6, 2024 அன்று இந்தியாவில் இப்படத்தை வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா.

மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ

 *மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”.*



பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் நிறுவனம் 

‘7 MILES PER SECOND’. 

இந்த நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ முதன் முதலாக பட தயாரிப்பில் இறங்குகிறார். இவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு “மிஸ் யூ” என்று பெயர் வைத்துள்ளார். 


இப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடிக்கிறார். 

‘சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையும், புதுமையான திரைக்கதையும் அமைந்ததால் இந்த காதல் கதையை ‘மிஸ்’  பண்ணாமல் நடிக்க ஒத்து கொண்டுள்ளார் சித்தார்த். 

இதில், தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். 


‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை  இயக்கிய  N.ராஜசேகர் இப் படத்தை இயக்குகிறார். 

இப்படத்தை காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்கு படமாக உருவாக்கியுள்ளார் டைரக்டர் . 


ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், நகைச்சுவை மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படத்தைக் கலகலப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குனர். 

ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பின்னணி இசைக்கு பேர் போன ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காக சிறப்பாக மெனக்கெட்டு 8 பாடல்களை வழங்கியுள்ளார்.  

‘சதுரங்க வேட்டை’ போன்ற பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த KG.வெங்கடேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குனரோடு திரைக்கதை அமைத்துள்ளார். 


இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரும் காதலித்து ரசித்து பார்த்த  ‘பழைய’ சித்தார்த்தைப் பார்க்கலாம்.


பாடல்கள்: மோகன் ராஜன் & ரோகேஷ்

கலை: சிவசங்கர்

சண்டைப் பயிற்சி: தினேஷ் காசி


Pro: Johnson

Actor Siddharth is Back as Romantic Lover Boy in ‘MISS YOU

 *Actor Siddharth is Back as Romantic Lover Boy in ‘MISS YOU’* 



7 Miles Per Second, one of the most well-esteemed Branding and Marketing firms in Tamil Nadu, headed by Mr. Samual Mathew is embarking on its journey of production in Tamil cinema. The maiden production has been titled ‘Miss You’. 


Actor Siddharth is playing the lead role in this film. The actor, winning laurels and extolled with praises for his unparalleled performance for ‘Chithha’ decided to work on this project for its riveting story and engrossing screenplay. 


Actress Ashika Ranganath, the leading and successful heroine in Telugu and Kannada industry, is playing the female lead role. 


Filmmaker N. Rajasekar, the director of commercially successful and neat family entertainers like ‘Maapla Singam’ and ‘Kalathil Sandhippom’ is helming this project. He has created this film as an engrossing entertainer with the right blend of romance, action, and comedy. 


The director has skilfully crafted the movie to highlight the humorous elements and the acting potential of an entire star cast rather than solely focusing on the lead characters. 


J.P., Ponvannan, Naren, Anupama, Rama, Bala Saravanan, Karunakaran, ‘Lollu Sabha’ Maaran, Sashtika, and many more prominent actors are a part of this star cast. Ghibran, the colossal creator of outstanding BGMs for many movies, has made scrutinizing efforts in composing 8 songs for this film. 


KG. Venkatesh, the visual magician of movies like Sathuranga Vettai and many hit films is handling cinematography for this movie. Dinesh Ponraj is overseeing editing works and Dinesh is taking care of choreography for this film. Ashok. R, the dialogue writer of many promising films and web series including ‘Paper Rocket’ is writing dialogues and shares the credit of ‘screenplay’ with the director for this film. 


The audience and fans will witness the ‘Lover Boy’ Siddharth after a long hiatus with this film. 


Mohan Rajan and Rokesh have penned lyrics. Siva Shankar is the art director and Dinesh Kasi has choreographed action sequences for this film. 


Public Relations: Johnson

Wednesday 5 June 2024

Vidharth, Janani feature in New movie*

 Vidharth, Janani feature in New movie*
















*Vidharth, Janani unite for Hyperlink Story*


*Vidharth, Janani unite for new movie*


Cuviyam Studios which has handled Post Production works for various successful Tamil films have ventured into movie production under the banner Cuviyam Films. That said Lalgudi M. Hariharan on behalf of cuviyam films have begun production of their maiden film.


The Movie has Vidharth and Janani in the lead roles. The cast of this untitled flick includes MS. Baskar, Saravanan, Babloo Prithveeraj, Namita Krishnamurthy, Shaariq Hassan, Vikas and Maga in prominent roles. Lyrics have been penned by Karthik Netha, music scored by Lalgudi M Hariharan. The film has Govindh N for editing and cinematography is done by Prabu Rhagav. The movie is written and directed by Krishna Kumar. Production design is done by Saranya Ravichandran and costumes are designed by Lekha Mohan.


On speaking about the movie director Krishna Kumar said, "the mistake we make in life will definitely teach us a lesson. That said the movie revolves around a mistake which takes turns. I have approached hyperlink non linear format in the screenplay of this movie."


"We are trying something new which hasn't been done by others. The story has suspense thriller, drama and love elements which will conclude as climax. The movie will go on floors this July and we have planned to shoot continuously for 35 days."


This film has officially begun with auspicious pooja which was attended by the cast and crew. The team will release the title and first look poster of the film soon.


Cast:


Vidharth 

MS Baskar 

Janani 

Saravanan 

Babloo Prithveeraj 

Namita Krishnamurthy

Shaariq Hassan

Vikas

Maga


Writer - Director : Krishna Kumar 

DOP : Prabu Rhagav 

Music : Lalgudi M.Hariharan 

Editor : Govindh N

Production Designer : Saranya Ravichandran 

Costume Designer : Lekha Mohan

Lyricist : Karthik Netha

Produced by: Cuviyam Films

Producer : Lalgudi M Hariharan

Pro : Sathishwaran

ஹைபர் லிங்க் கதையில் நடிக்கும் விதார்த், ஜனனி

 *ஹைபர் லிங்க் கதையில் நடிக்கும் விதார்த், ஜனனி*


*மூன்று கதை, ஒரு முடிவு... விதார்த், ஜனனி நடிக்கும் புதிய படம்*
















தமிழ் சினிமாவில் பல வெற்றி பெற்ற படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை செய்து வந்த குவியம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தற்போது குவியம் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பில் இறங்கியுள்ளது.  குவியம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் லால்குடி எம்.ஹரிஹரன் தயாரிக்கும் புதிய படத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கியுள்ளது. 


இந்த புதிய படத்தில் விதார்த், ஜனனி, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுத லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார். கோவிந்த்.நா படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி கிருஷ்ணா குமார் இயக்குகிறார்.


இப்படம் குறித்து கிருஷ்ணா குமார் கூறும்போது, நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. எதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம். சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகளாக திரைக்கதை நகர்ந்து ஒரே புள்ளியில் கதை முடியும். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் தொடர்ந்து நடத்த இருக்கிறோம் என்றார்.


இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் போடப்பட்டது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.


நடிகர்கள்:


விதார்த் 

எம்.எஸ்.பாஸ்கர் 

ஜனனி 

சரவணன் 

பப்லு பிரித்விராஜ் 

நமிதா கிருஷ்ணமூர்த்தி

ஷாரிக் ஹாசன்

விகாஸ்

மகா


தொழில்நுட்ப கலைஞர்கள்:


எழுத்து - இயக்கம் : கிருஷ்ணா குமார் 

ஒளிப்பதிவு : பிரபு ராகவ் 

இசை : லால்குடி எம்.ஹரிஹரன்

பாடலாசிரியர்: கார்த்திக் நேதா

எடிட்டர்: கோவிந்த்.நா

தயாரிப்பு வடிவமைப்பாளர்: சரண்யா ரவிச்சந்திரன் 

ஆடை வடிவமைப்பாளர்: லேகா மோகன்

தயாரிப்பு: குவியம் பிலிம்ஸ்

தயாரிப்பாளர்: லால்குடி எம் ஹரிஹரன்

மக்கள் தொடர்பு : சதீஷ்வரன்


*

Filmmaker Ananda Krishnan’s Directorial*

 Filmmaker Ananda Krishnan’s Directorial* 

*Metro Shirish-Bobby Simha-Yogi Babu starrer ‘Non-Violence’ Releasing Soon!* 




The film "Non Violence" is a fresh venture bankrolled by AK PICTURES Lekha, with renowned director Ananda Krishnan of ‘Metro’ fame helming it. The film, starring Metro Shirish, Bobby Simha, and Yogi Babu in prominent roles, this project promises to captivate audiences with its unique storyline. 


The film's narrative unfolds in the city of Madurai during the 90s. Director Ananda Krishnan has crafted a captivating screenplay that primarily revolves around the events occurring within Madurai prison during that era. There is great anticipation for director Ananda Krishnan to achieve a hat-trick of successes with this film, following the consecutive triumphs of 'Metro' and 'Kodiyil Oruvan’. 


The film, given that the narrative takes place in the 1990s, the production crew has dedicated significant resources to authentically recreate that era on screen. Every detail, from the props and wardrobe to the filming locations, has been meticulously curated to transport viewers back in time. This film promises to offer a fresh cinematic experience for contemporary audiences.


The star-cast includes Metro Shirish, Bobby Simha, & Yogi Babu in the titular characters with Aditi Balan, Garuda Ram, Aditya Kathir and many others in the pivotal characters.  



The shooting of the film is nearing its final stage. Soon the details about the teaser and trailer of the film will be announced officially. The film is releasing in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi languages.



*Technical Crew*


Written &  directed by Ananda Krishnan

Music - Yuvan Shankar Raja

Cinematography - N S Udayakumar

Editor - Srikanth N B

Producer - Lekha (AK PICTURES)

Public Relations - Sathish Kumar

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில்

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும்  திரைப்படம்  "நான் வயலன்ஸ்"  விரைவில் திரையில் !! 




AK PICTURES நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரிப்பில்,  மெட்ரோ படப்புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில்  நடிக்கும் திரைப்படத்திற்கு  "நான் வயலன்ஸ்"  என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. 


90 களின் மதுரை மாநகரைச் சுற்றி,  இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் மதுரையின் சிறைக்குள் நடக்கும், பெரும்பாலான சம்பவங்களை மையமாக வைத்து, சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர்  ஆனந்த கிருஷ்ணன். மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்  இயக்கத்தில்  இப்படமும் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.  


90களின் காலகட்டத்தில்  நடக்கும் கதை என்பதால்,  அந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டுவரப் படக்குழு  பெரும் உழைப்பைக் கொட்டியுள்ளது. அந்தகாலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், இடமென ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டு, திரையில் கொண்டுவந்துள்ளது படக்குழு. இக்கால தலைமுறைக்கு ஒரு புதுமையான திரை அனுபவமாக இப்படம் இருக்கும். 


நடிகர் மெட்ரோ ஷிரிஷ் , பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அதிதி பாலன், கருட ராம், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.


தொழில்நுட்ப குழு 


எழுத்து, இயக்கம் - ஆனந்த கிருஷ்ணன்

இசை -  யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவாளர் -  N S உதயகுமார்

எடிட்டர் - ஸ்ரீகாந்த் N B

தயாரிப்பாளர் - லேகா ( AK PICTURES )

மக்கள் தொடர்பு - சதீஷ் குமார்


*

Vels Film International Dr. Ishari K Ganesh presents*

 Vels Film International Dr. Ishari K Ganesh presents* 







*Filmmaker Karthik Venugopalan directorial* 


*Hiphop Tamizha Adhi starrer 'PT Sir' Success Meet* 



Producer Dr. Ishari K Ganesh of Vels Film International has churned out lots of promising projects that have worked out very well at the box office. The latest to join the league is PT Sir, starring Hiphop Tamizha Adhi in lead. The film has emerged a  huge success at  the  box office. Marking this special occasion, the entire cast and crew met and thanked the press and media fraternity during the success meet. 


Here are some excerpts from the event.


Art Director said, "Director Karthik had crafted a gripping tale with an issue that we witness everyday in our lives. I thank hero Aadhi, a pillar of this film. The entire team had put in a lot of hardwork to shape this movie efficiently. There is male chauvinism in many places across society and this film has dealt with it perfectly."


DOP Madhesh said, "I thank producer Ishari K Ganesh sir and entire Vels International Team for being a great support throughout the project. I thank Aadhi for introducing me to the creators of this project."


Director Karthik Venugopalan said, "I thank Aadhi brother for elevating my script to such a great level. I am indebted to producer Ishari sir for giving me creative freedom. I thank Ilavarasu sir for delivering such a realistic performance. Munishkanth has helped the entire first half with his presence. After completing the script works, we wanted someone who can carry the second half involving courtroom scenes engagingly. I thought Bhagyaraj sir would add more life to the judge's role. It's such a great privilege to have him accepting to play this role. We wanted to convey something beyond the routine harrasment of women. We wanted to showcase the pain of victimized women, who are burdened by society. It has given them more pain than the harrassment itself.Aadhi and I have received more messages from women, who appreciated  us boldly focussing on this issue. It gives us immense joy to gain such a response."


Actor Munishkanth said, "The entire team has been so  supportive throughout the film. I am thankful to producer Ishari sir, Karthik Venugopalan sir and the entire team for this opportunity."


Actor Ilavarasu said, "The entire team has been so responsible. Hiphop Adhi has such a huge fan base for his musical journey. Today, he has become one of the bankable stars of the box office, but still he is so humble and down to earth. Karthik Venugopalan has imparted a beautiful message through this movie. Tamil industry definitely needs directors like him.. The film deals with a serious issue happening inside an educational institution. But it's really surprising to see Dr. Ishari K Ganesh sir producing this film. The entire team had so much energy and positivity towards nourishing this project. Only few films add more responsibility upon the actors, and I experienced it when Karthik narrated the script. I thank press, media and film lovers for making this film successful."


Actor K Bhagyaraj said, "Karthik Venugopalan has created such a wonderful script with engrossing screenplay and strong characters. It's nice to see that actors Ilavarasu, Munishkanth and everyone delivering stellar performances. Aadhi has exhibited his acting prowess in this film. These days, success of films have become a scarcity. It's so heartening to see that PT Sir has garnered soulful response from critics and audiences. I am so happy to be a part of such a commendable project. I wish the entire team to deliver more and more succesful films in the future."



Producer Dr. ishari K Ganesh said, "As Bhagyaraj sir said, it's not an easy thing for a film to complete 50 days succesfully in  theaters. Of course, the technological advancements including the premiering of movies on OTT platforms early has curbed the theatrical run of many movies. As a producer I am so happy that PT Sir has collected a whopping BO figure of Rs.12.5Cr approximately and is still running successfully in 150 theaters. I usually don't read reviews, but it is such a heartwarming experience to see press and media acclaiming this movie. It was Hiphop Adhi who got me this project, and he is the main pillar in escalating the success value of this film. K Bhagyaraj sir made the climax totally amazing with his performance. I thank the entire team for making this film successful. Herewith, I am assuring that Vels Film International will continue to provide responsible and good content driven movies. Of course, Both myself and Aadhi will be working together in many projects. Thank you all."



Actor Hiphop Tamizha Adhi said, "I thank Press and Media Fraternity for making this film successful. I read each and every review. I thank you all for the amazing verdicts, and i have taken the constructive criticisms consciously and will follow them in my forthcoming projects. Vels Film International Dr. Ishari K Ganesh sir has made the film achieve a great success. More than basking in the glory over the grand success of this film, all of us are emotionally overwhelmed with the way, the film has created a huge impact upon the society. More than being a  good producer, Ishari sir is a good human. K Bhagyaraj sir added the Midas-Touch to this small film with his magnetic performance. Ilavarasu sir started inspiring me on the sets as an actor. I learnt a lot from him. I thank entire cast and crew for their immense support. Karthik Venugopalan isn't just a good filmmaker, but a disciplined director, and such qualities will make him the bankable and producer friendly. We travelled throughout Tamil Nadu to watch the film along with audience. We came across many heart-touching moments that left us frozen in astonishment. I am indebted to Karthik Venugopalan a lot for making this film for me. DOP Madhesh sir has been a great support."

P T சார்' திரைப்பட வெற்றி விழா

*'P T சார்' திரைப்பட வெற்றி விழா !!*






வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த  மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் 'P T சார்'.  ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினில் பெரும் வரவேற்பைக் குவித்த இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.   



இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில்,  படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.  




இந்நிகழ்வினில்…


ஆர்ட் டைரக்டர் அமரன் பேசியதாவது… 

இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு என் முதல் நன்றி. அவர் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை, நாம் தவறவிடுவதை, நம் மனதைத் தாக்கும் நிகழ்வை மையமாக வைத்து, அழகான திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்தை தயாரித்த டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் உழைத்த சக கலைஞர்களுக்கு நன்றி. ஆண் எனும் கர்வம் அழியவேண்டும் என நினைப்பவன் நான், நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்களைக் கவனிக்கையில் நான் ஆணாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். நாம் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் படம் தான் இது. இப்படத்தைப் பாராட்டி வரவேற்ற அனைவருக்கும் நன்றி 


ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்  பேசியதாவது..

இந்தப்படத்தை எல்லோரிடமும் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்த ஹிப்ஹாப் ஆதி, இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தைத் தயாரித்த டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் உழைத்த சக கலைஞர்களுக்கு நன்றி.


இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியதாவது…

ஆதி பிரதருக்கு நன்றி. நான் யோசித்ததை ஏற்று, அதைக் கதையாகக் கொண்டு சேர்த்தது அவர் தான். அதே போல் நான் கேட்டதையெல்லாம் தந்து, இப்படத்தைப் பெரிய அளவில் கொண்டு சேர்த்த ஐசரி சாருக்கு பெரிய நன்றி. மேலும் இப்படத்தில் உழைத்த என் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இளவரசு சார் இப்படத்தில் தந்த நடிப்பு, படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது, அவருக்கு என் நன்றி.  முனீஷ்காந்த் மிக அட்டகாசமான நடிப்பைத் தந்தார். இரண்டாம் பாதி கோர்ட் டிராமாவாக ஆகிவிடக்கூடாது என்பதால் ஜட்ஜாக பாக்யராஜ் அவர்களை  அணுகினேன், அவர் வந்த பிறகு இந்தப்படம் இன்னும் சிறப்பாக அமைந்தது. இந்தக்கதை யோசித்த போது ஹராஸ்மெண்ட் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள் ஆனால் அதன் பிறகு பெண்கள் படும் கஷ்டத்தைச் சொல்லலாம் என நினைத்தேன். நிறையப்பேர் படம் பார்த்துவிட்டு எங்களுக்கும் இது நடந்துள்ளது இப்படம் நல்ல தெளிவைத் தந்துள்ளது என்று கூறுகிறார்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி. படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி. 



நடிகர் முனீஷ் காந்த் பேசியதாவது…

தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோவுக்கு நன்றி.  படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி. என் கதாபாத்திரத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி. 



நடிகர் இளவரசு பேசியதாவது…

இயக்குநர் வேணுகோபாலுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். பல படங்களில் நடிக்கக் கேட்கும்போது  நாமும் வீட்டு பில் கட்ட வேண்டுமென்பதால் தான் போக வேண்டும். ஒரு சில இயக்குநர்கள் நமக்கு சிறப்பான கதாப்பத்திரத்தை தருவார்கள். அப்படி கார்த்திக் எனக்கு நல்ல கதாபாத்திரத்தைத் தந்துள்ளார். இந்த மாதிரி அப்பா மகளை மையப்படுத்திய கதையை, இன்றைய காலத்தில் சொல்ல ஒரு ஹீரோ தேவைப்படுகிறது. சினிமாவைத் தாண்டிய இமேஜ் உள்ள ஹிப்ஹாப் ஆதி இப்படத்தைச் செய்ததற்கு நான்  நன்றி சொல்லிக்கொள்கிறேன். தனக்கு ஒரு வியாபாரம் இருக்கும் சூழ்நிலையில் இம்மாதிரி கதையை தேர்ந்தெடுத்த அவருக்கு நன்றி. சினிமாவில் சில நேரம் நல்ல விதைகள் விழும். அந்த வகையில் கார்த்தி மிகச்சிறப்பான இயக்குநர். காலேஜ் சேர்மனை வில்லனாகக் காட்டும் கதை என நினைக்காமல், கல்லூரி நடத்தும் ஐசரி கணேஷ் சார்  இப்படத்தைத் தயாரித்ததற்கு என் நன்றி. எந்நாளும் எனக்கு வாத்தியாராக இருக்கும் பாக்யராஜ் சாருக்கு நன்றி. என் கதாபாத்திரத்தை விமர்சனத்தில் பாராட்டிய அனைவருக்கும் நன்றி. 



இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது…

ஹீரோ ஹிப்ஹாப் ஆதிக்கு என் முதல் நன்றி, அவர் நடிக்க நல்ல கதை  தேர்ந்தெடுக்க வேண்டுமென்று நினைக்காமல், நல்ல கதையைத் தயாரிப்பாளரிடம் எடுத்துச் சென்று, அந்த இயக்குநருக்கு வாழ்வை ஏற்படுத்தித் தந்ததற்கு நன்றி. ஐசரி இந்தக்கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்ததற்கு நன்றி. கார்த்திக் வேணுகோபால் நான் பிறந்த ஊரிலிருந்து வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நல்ல கதையைச் சிறப்பான திரைக்கதையில் தந்துள்ளார் வாழ்த்துக்கள். படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள். 


வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் 

'P T சார்' படத்தின் மூன்றாவது நிகழ்ச்சி இது. படம் வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் சினிமாக்கள் இரண்டு நாள் ஓடுவது கடினமாக இருக்கிறது. அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு சினிமா மாறிவிட்டது. அதையெல்லாம் தாண்டி 'P T சார்'  நன்றாகப் போகிறது. அதிலும் பலர் ஒரு நல்ல சினிமாவை எடுத்திருக்கிறார்கள் என்று பாராட்டினார்கள் அது பெரிய மகிழ்ச்சி. வெற்றிப்படம் என்றாலும் திருப்தி இருக்க வேண்டும் அதற்குக் காரணமாக இருந்த இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி. அவர் சிறந்த இயக்குநராக வருவார். அவரது அடுத்த படத்தையும் நானே தயாரிக்கிறேன். புது இயக்குநர்கள் சிக்கனமாகப் படமெடுங்கள், நல்ல படமெடுங்கள். ஹிப்ஹாப் ஆதி தான் இந்தப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். அவர் இசையும் இதில் நன்றாக இருந்தது. பாக்யராஜ் சார் க்ளைமாக்ஸில் கலக்கிவிட்டார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பாராட்டிய உங்களுக்கு என் நன்றிகள்



நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…

ஒவ்வொரு பத்திரிக்கை நண்பர்களுக்கும் எங்கள் படத்தைச் சரியாகக் கொண்டு சேர்த்ததற்காக என் நன்றி. இன்று வரை படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள் தான். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அறிவுரையின் படி நல்ல படங்களைத் தொடர்ந்து செய்வேன். ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு இந்தப்படத்தைத் தயாரித்ததற்காக ஐசரி சாருக்கு நன்றி. பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் இரண்டு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் என்று சொன்ன போது, படம் வசூலித்தது என்பதை விட அதிகம் சந்தோசப்பட்டார் அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து உங்களுடன் படம் செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்தப்படத்தை நம்பி வந்த ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. கோர்ட் ரூம் சின்ன போர்ஷன் அதை நம்பி வந்து, எங்களுக்காக நடித்து தந்த பாக்யராஜ் சாருக்கு நன்றி. இளவரசு அண்ணன் ஒரு பாத்திரமாக வாழ ஆரம்பித்து விடுகிறார். ஷீட்டிங்கில் அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடிப்பதைப் பார்த்து அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். பிரபு சார்,  பட்டிமன்றம் ராஜா சார், தேவதர்ஷிணி மேடம், என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தார்கள். பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். இதையெல்லாம் ஒழுங்கு படுத்தி, நல்ல டைரக்டர், சிக்கனமான டைரக்டர் என்று பெயரெடுத்த கார்த்திக்கிற்குப் பாராட்டுக்கள். இந்தப்படத்தில் என்னை நாயகனாக்கியதற்கு நன்றி கார்த்திக். இந்தப்படத்தில் அனைத்து கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. முனீஷ் அண்ணாவுடன் திரும்ப நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் வெற்றியை விட எனக்கு மனதளவில் மிகப்பெரிய திருப்தியை இந்தப்படம் தந்துள்ளது அனைவருக்கும் நன்றி. 


இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ளனர்.


இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் கடந்த  மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



*